மின்சார ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

இதுபோன்ற குறைகளை சரி செய்ய ரெயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சார ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி
Published on

சென்னை,

சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர், நுங்கம்பாக்கம், கேடம்பாக்கம், தியாகராயநகர் வழியாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் நேரத்தில் இருந்து 5 முதல் 10 நிமிடங்கள் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ரெயில்கள் தாமதமாவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

ரெயில்கள் தாமதம் ஆவதால் அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக் கூடியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற குறைகளை சரி செய்ய ரெயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com