திருச்சி விமான நிலையத்தில் 12 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

இயந்திர கோளாறு காரணமாக விமானம் புறப்பட தாமதமானதால் 12 மணி நேரமாக காத்திருந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் 12 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Published on

திருச்சி,

இயந்திர கோளாறு காரணமாக விமானம் புறப்பட தாமதமானதால் 12 மணி நேரமாக காத்திருந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு வர வேண்டிய விமானம், தாமதமாக இரவு 2 மணிக்கு வந்தது. பின்னர், விமானத்தில் பயணிகள் புறப்பட தயாராக இருந்த போது, இயந்திர கோளாறு காரணமாக அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.

பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தின் பிரச்சனையை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனால், 12 மணி நேரமாக விமான நிலையத்தில் 180 பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்ததால் பொறுமையை இழந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேவையான வசதிகள் மற்றும் தகவல்களை விமான நிலைய ஊழியர்கள் தெரிவிக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com