கூட்டுறவு சங்க தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றம்

கூட்டுறவு சங்க தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றம்
Published on

தலைவாசல்:-

தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக வக்கீல் வேல்முருகன் பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஆத்தூர் வட்டார கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மற்றும் சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஆகியோரிடம் சங்கத்தின் இயக்குனர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்தநிலையில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கூட்டம் நடந்தது. இதற்கு கூட்டுறவு சார்பதிவாளர் வில்லவன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் சங்க இயக்குனர்கள் 7 பேரில் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் துணைத்தலைவர் விமலாதேவி உள்ளிட்ட இயக்குனர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். இதனால் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com