தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு

தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
Published on

தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மதுரை/ திருநெல்வேலி-யில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று செய்து வந்த சான்றிதழ் சரி பார்ப்பு பணி தற்போது தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திலும் செய்யப்படுகிறது.

புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்றவற்றிக்கு online-ல் (பாஸ்போர்ட் சேவா இணையதளம்) விண்ணப்பித்து appoinment பெற வேண்டும். விண்ணப்பிக்கும் போதே சேவைக்குரிய கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். (Passport fee- Rs.1,500) விண்ணப்பித்த பின் எந்த தேதியில் அவர்கள் சேவை மையத்தை அணுக வேண்டும் என்கிற விபரம் தெரிவிக்கப்படும். அந்த குறிப்பிட்ட தேதியில், உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகி தங்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக அரசின் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சசர் கீதாஜீவன் இந்த சேவையை தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் பெற்றுக்கொண்டபோது, தூத்துக்குடி மக்கள் பாஸ்போர்ட் சேவையைப் பெறுவதற்கு வேறு ஊர்களுக்கு செல்லாமல் தூத்துக்குடியிலேயே இந்த சேவையை உபயோகித்து பயனடையுமாறு கேட்டுக் கெண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com