

திண்டுக்கல்
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் ஆக இருந்தவர் பசுபதிபாண்டியன். கடந்த 2012ஆம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் இந்த படுகொலை வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட பட்டியலில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நிர்மலாதேவி(60). இவர் நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர்.
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றவாளியான 60 வயதான நிர்மலா தேவியை மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர். பின்னர் அவரின் தலையை மட்டும் தனியாக துண்டித்து எடுத்து வந்து பசுபதிபாண்டியன் வீட்டின் முன்பு போட்டு விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதை அறிந்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் விரைந்து வந்து நிர்மலாதேவியின் தலையை மீட்டு சென்று அதன் பின்னர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.