கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் காத்திருக்கும் நிலை

புதிய எந்திரத்துக்கு மின்இணைப்பு இல்லாததால் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் காத்திருக்கும் நிலை
Published on

கீழக்கரை,

கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இதில் சுமார் 25-க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே எந்திரத்துக்காக மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து நோயாளிகள் கூறியதாவது:-. ஏற்கனவே இருந்த எக்ஸ்ரே எந்திரம் கடந்த 40 வருடங்களுக்கு முன் போடப்பட்ட மின் வயர்கள் புதிய எந்திரத்தில் இணைக்கப்பட்ட போது மின்கசிவு ஏற்பட்டு அனைத்து வயர்களும் எரிந்து விட்டது.

இதுகுறித்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது காலை 8 மணிக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு மதியம் 12 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம் 11 மணிக்கு தான் ஜெனரேட்டர் போடப்பட்டு 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com