

சென்னை,
பட்டாவை ரத்து செய்ய கோரிய வழக்கில், இறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருப்போரூர் நெமிலியில் உள்ள தன்னுடைய சொத்துகளுக்கு, ஆளவந்தார் அறக்கட்டளை பெயரில் பட்டா வழங்கப்பட்டு உள்ளதால், அந்த பட்டாவை ரத்து செய்யக் கோரி கே.எம்.சாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அப்போது, முத்துகிருஷ்ணன் 1997-ல் இறந்துவிட்டதாகவும், அதன் பிறகு அவரது சொத்துகளை தான் நிர்வகித்து வருவதாகவும் சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, இறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க கோர்ட்டு தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டார்.