ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு


ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா:  வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
x

பட்டா வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது . சென்னை பெருநகரப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் .

மற்ற இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் . 3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் சுமார் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .


Next Story