வாகனம் மோதி புள்ளிமான் சாவு

வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
வாகனம் மோதி புள்ளிமான் சாவு
Published on

புதுக்கோட்டை, ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு புதுக்கோட்டை மச்சுவாடிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com