139 சவரன் நகைகள் மோசடி செய்த அடகுக்கடை உரிமையாளர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரு நகை அடகுக்கடை உரிமையாளர் 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானார்.
நகை மோசடி, கைது.
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் 139 சவரன் நகைகள் மோசடி செய்த அடகுக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

139 சவரன் நகைகள் மோசடி

தேனி மாவட்டம், வருசநாடு தும்மக்குண்டுவைச் சேர்ந்த துரைமுருகன் (வயது 38), ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். இவரிடம் ரமேஷ் உள்ளிட்ட 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு உரிமையாளர் தலைமறைவானார்.

அடகுக்கடை உரிமையாளர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கடையின் உரிமையாளர் துரைமுருகன், அவரது தந்தை முருகேசன், ஊழியர் ஸ்ரீமதி(26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், ஏற்கனவே ஸ்ரீமதி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று உரிமையாளர் துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com