ஏப்ரல் 2, 3, 4-ந் தேதிகளிலும் சம்பளம் வழங்கல், கருவூல அலுவலகங்கள் இயங்க வேண்டும்

ஏப்ரல் 2, 3, 4-ந் தேதிகளிலும் சம்பளம் வழங்கல், கருவூல அலுவலகங்கள் இயங்க வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.
ஏப்ரல் 2, 3, 4-ந் தேதிகளிலும் சம்பளம் வழங்கல், கருவூல அலுவலகங்கள் இயங்க வேண்டும்
Published on

சென்னை,

தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குகள் ஆணையருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் சம்பளம் வழங்கு அலுவலர்களிடமும், கருவூல அலுவலர்களிடமும், பல்வேறு கட்டணங்களை செலுத்துவதற்காக பில்களை வழங்கிக்கொண்டிருப்பார்கள்.

எனவே அந்த பில்களுக்கான பணத்தை உடனே செலுத்தும் வகையில் மாவட்டங்களில் ஏப்ரல் 2, 3 மற்றும் 4-ந் தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள்) அந்த அலுவலகங்கள் இயங்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன் மூலம் அவசரமாக பணம் பெற வேண்டிய பில்கள் உடனே முடிக்கப்பட ஏதுவாக இருக்கும்.

இதுதொடர்பாக அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com