பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை

ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை
Published on

திருவள்ளூர்,

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும் பழவேற்காடு கடல் பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், 24-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, பழவேற்காடு மீனவாகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூ மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com