சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்

சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது
சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திட்டை சாலை உள்ளது. இந்த சாலையை இந்த சுற்றுவட்டார பகுதி, திட்டை, தில்லைவிடங்கன் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையில் சின்னத்தம்பி நகர் முதல் காமாட்சி நகர் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் சாலை சீரமைப்பது குறித்து சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக நலத்துறை தாசில்தார் சாந்தி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், கழுமலையார் பாசன சங்கத் தலைவர் கோவி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேதமடைந்த திட்டை ரோடு சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும். சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்பொழுது சம்பந்தப்பட்ட கிராம சாலை திட்ட அதிகாரிகள் யாரும் வராததால் கூட்டம் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், வாகன ஆய்வாளர் விசுவநாதன், சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோவன், ஊர் தலைவர்கள் பாஸ்கரன், ராமானுஜம், பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com