ரெயிலில் அடிபட்டு மயில் சாவு

திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு மயில் ஒன்று இறந்தது.
ரெயிலில் அடிபட்டு மயில் சாவு
Published on

சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரெயில் நேற்று காலை 11 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெயில் என்ஜினில் ஒரு பெண் மயில் சிக்கி இருந்ததை ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர். இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று என்ஜினில் சிக்கிய மயிலை வெளியே எடுத்தனர். அந்த மயில் இறந்து இருந்தது. திண்டுக்கல் அருகே காட்டுப்பகுதியில் வந்த போது, ரெயிலில் அடிபட்டு மயில் இறந்து இருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும் வனக்காவலர் முத்துமாரியை வரவழைத்து, அவரிடம் மயிலின் உடலை போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com