ரெயிலில் அடிபட்டு மயில் சாவு

மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு மயில் பரிதாபமாக இறந்தது.
ரெயிலில் அடிபட்டு மயில் சாவு
Published on

மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில், காலை 6.10 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அப்போது, என்ஜின் பகுதியில் ஒரு மயில் இறந்து கிடப்பதை ரெயில்வே போலீசார் பார்த்தனர். உடனே என்ஜினில் சிக்கியிருந்த மயிலின் உடலை மீட்டனர். பின்னர் அதனை, திண்டுக்கல் வனக்காவலர் முத்துமாரியிடம் ஒப்படைத்தனர். இரையை தேடி, தண்டவாள பகுதியை மயில் கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com