ரெயிலில் அடிபட்டு மயில் சாவு

ரெயிலில் அடிபட்டு மயில் பரிதாபமாக இறந்தது.
ரெயிலில் அடிபட்டு மயில் சாவு
Published on

மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 6.15 மணிக்கு திண்டுக்கல் ரெயில்நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெயில் என்ஜினில் ஒரு மயில் சிக்கி இறந்து இருந்ததை, ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மயிலின் உடலை மீட்டனர்.

திண்டுக்கல் அருகே காட்டு பகுதியில் ரெயில் வந்த போது, அடிபட்டு மயில் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அது, பெண் மயில் ஆகும். அந்த மயிலின் உடலை வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com