ரெயிலில் அடிபட்டு மயில் சாவு

திண்டுக்கல் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு மயில் ஒன்று இறந்தது.
ரெயிலில் அடிபட்டு மயில் சாவு
Published on

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.30 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. அப்போது ரெயில் என்ஜினில் ஒரு மயில் சிக்கி இருப்பதை ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர். இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து என்ஜினில் சிக்கிய மயிலை வெளியே எடுத்தனர். அப்போது அது இறந்து இருந்தது. திண்டுக்கல் அருகே காட்டுப்பகுதியில் ரெயில் வந்தபோது தண்டவாளத்தின் குறுக்காக பறந்த மயில் என்ஜினில் சிக்கி இறந்தது தெரியவந்தது. மேலும் அது 2 வயதே ஆன பெண் மயில் ஆகும். இதையடுத்து மயிலின் உடலை வனத்துறையினரிடம், ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com