ரெயில் என்ஜினில் அடிபட்டு மயில் சாவு

திண்டுக்கல் அருகே, ரெயில் என்ஜினில் அடிபட்டு மயில் பரிதாபமாக இறந்தது.
ரெயில் என்ஜினில் அடிபட்டு மயில் சாவு
Published on

கரூரில் இருந்து நேற்று காலை ஒரு ரெயில் என்ஜின் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயில் என்ஜினில் ஒரு மயில் சிக்கி இருப்பதை ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர். அதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று என்ஜினில் சிக்கிய மயிலை வெளியே எடுத்தனர்.

ஆனால் அந்த மயில் இறந்து இருந்தது. மேலும் அது 2 வயதான ஆண் மயில் ஆகும். திண்டுக்கல் அருகே காட்டுப் பகுதியில் ரெயில் என்ஜின் வந்தபோது, மயில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினரை வரவழைத்து, மயிலின் உடலை போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com