மின்சாரம் தாக்கி மயில் சாவு

மின்சாரம் தாக்கி மயில் இறந்தது
மின்சாரம் தாக்கி மயில் சாவு
Published on

ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தம் அருகே மின் டிரான்ஸ்பார்மரில், மயில் ஒன்று நேற்று மாலை பறந்து வந்து அமர்ந்தது. அப்போது மின்சாரம் தாக்கி மயில் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து போன மயிலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனச்சரகர் ரவீந்திரன் கூறும்போது, இறந்தது 1 வயது மதிக்கத்தக்க பெண் மயில் என்றும், பிரேத பரிசோதனை முடிந்ததும் வனப்பகுதியில் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com