கிணற்றில் விழுந்த மயில்- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில், கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து கிடப்பதாக அந்த ஊர் மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து கிடப்பதாக அந்த ஊர் மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பெண் மயிலை வலை கயிறுகள் மூலம் லாவகமாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துரிதமான மீட்பு சேவையை அல்லிகுளம் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story






