மின்சாரம் தாக்கி மயில் சாவு

குத்தாலம் அருகே மின்சாரம் தாக்கி மயில் சாவு
மின்சாரம் தாக்கி மயில் சாவு
Published on

குத்தாலம்:

குத்தாலம் அருகே உள்ள நக்கம்பாடி காளியம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த மயில் ஒன்று உயர பறந்தபோது அங்குள்ள மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அந்த மயில் உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பாலையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து சீர்காழி வனத்துறை அதிகாரி கலைவாணன் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மயிலின் உடலின் மீது தேசிய கொடியை போர்த்தி எடுத்துச் சென்றார். பின்னர், கால்நடை மருத்துவர் மூலம் அந்த மயிலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com