தென்னம்பாளையம் மார்க்கெட்டில் குவிந்த 10 டன் பீர்க்கங்காய்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று வழக்கத்தை விட பீர்க்கங்காய் வரத்து அதிகமாக இருந்தது. ஒரே நாளில் சுமார் 10 டன் பீர்க்கங்காய் விற்பனைக்கு குவிந்தது.
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் குவிந்த 10 டன் பீர்க்கங்காய்
Published on

வரத்து அதிகரிப்பு

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மொத்த மார்க்கெட்டிற்கு தினசரி வரக்கூடிய பீர்க்கங்காய் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. வழக்கமாக 6 முதல் 8 டன் பீர்க்கங்காய் வரத்து இருக்கும் நிலையில் நேற்று அவினாசி, சேவூர், பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 டன் பீர்க்கங்காய் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைவாக காணப்பட்டது.

விலை குறைவு

15 கிலோ எடை கொண்ட ஒரு பீர்க்கங்காய் கட்டு கடந்த சில வாரங்களாக ரூ.700 முதல் ரூ.800 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று ஒரு கட்டுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக இருந்ததால் விற்பனை களை கட்டியது. கடை வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். பீர்க்கங்காய் மொத்த விற்பனை விலை மேற்கண்டவாறு இருந்த நிலையில் கடைகளில் சில்லரை விலை சற்று அதிகமாக இருந்தது.

-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com