தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்

வெங்கத்தூர் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்
Published on

தமிழக அரசு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கடைக்காரர்கள் தொடர்ந்து கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த 32 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 3 கடைக்காரர்களுக்கு ரூ.62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com