

சின்னசேலம்
சின்னசேலம் அடுத்த வி.கூட்டுரோட்டில் கச்சிராயப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் மேற்பார்வையில், சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் மாயக்கண்ணன், சார்லஸ், ஜெகதீசன், வெங்கடேசன் ஆகியோரை கொண்ட குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பொது இடங்களில் புகைபிடித்த 7 பேர், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 கடை உரிமையாளர்கள் என மொத்தம் 11 பேருக்கு அபராதம் விதித்து ரூ.1,500 வசூலித்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பிளாஸ்டிக் குடோனில் டெங்கு காய்ச்சலை உருவாக்குகின்ற ஏ.டி.எஸ். கொசு புழுக்கள் இருந்ததை கண்டறிந்து அப்புறப்படுத்தி உரிமையாளரிடம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.