சோழிங்கநல்லூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

சோழிங்கநல்லூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சோழிங்கநல்லூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்
Published on

சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளில் விதிகளை மீறி பல்வேறு வாகனங்கள் செல்வதாகவும், அதனால் விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளதாகவும், சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்து ஆணையர் மற்றும் இணை ஆணையர் முத்து ஆகியோர் உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அருணாச்சலம் ஆகியோர் திடீரென நடத்திய வாகன சோதனையில், அதிக பொருட்களை ஏற்றி வந்த 5 சரக்கு லாரி வாகனங்கள், அதிக நபர்களை ஏற்றி வந்த 5 ஷேர் ஆட்டோக்கள், அதிவேகமாக வந்த 10 வாகனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன, விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கப்பட்டதை தொடர்ந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com