57 வழக்குகளில் அபராதம் விதிப்பு

கடைகளில் கலப்பட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான 57 வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
57 வழக்குகளில் அபராதம் விதிப்பு
Published on

கடைகளில் கலப்பட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான 57 வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

57 வழக்குகள்

சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தி கலப்படம், தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில், போலி மற்றும் உணவுக்கு ஒவ்வாத கேடு விளைவிக்கக்கூடியது என கண்டுபிடித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, சிவில் பிரிவில் பதியப்பட்ட 57 வழக்குகளுக்கு ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 500 அபராதம் விதித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

அபராதம் விதிப்பு

அதில், அதிகபட்சமாக பல்வேறு வகை நொறுக்கு தீனி, தரமற்ற உடல் உபாதையை உண்டு பண்ணும் என கண்டறிந்து பதிந்த 18 வழக்கில் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 500-ம், கலப்படம், தரமற்ற ஜவ்வரிசி தொடர்பான 17 வழக்கில் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம், சமையலுக்கு ஒவ்வாத மசாலா தொடர்பான 7 வழக்கில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரமும், சமையல் எண்ணெய் தொடர்பான 6 வழக்கில் ரூ.66 ஆயிரம் என மொத்தம் 57 வழக்குகளுக்கு அபராதம் விதித்து அந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

இதுதவிர, இன்னும் 123 சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், 273 குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும், 22 குற்ற வழக்குகள் கோர்ட்டில் பதிவாகாமல் இருப்பதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com