நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுரை
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி கூட்டரங்கில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர்களிடம் குற்ற வழக்குகளை குறைப்பது, உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த அவர் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த 18 போலீஸ்காரர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜயகார்த்திக்ராஜா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com