நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு, கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகளின் விவரங்கள், போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை போலீஸ் அதிகாரிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு கேட்டறிந்தார். பின்னர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், மகேஷ் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com