தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை.. அதிமுக அமளி, வெளிநடப்பு


தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை.. அதிமுக அமளி, வெளிநடப்பு
x
தினத்தந்தி 20 Jan 2026 10:10 AM IST (Updated: 20 Jan 2026 10:45 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் அவை கூடுவது வழக்கம். சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சியான அதிமுகவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர். இதே காரணத்தை தெரிவித்து பாஜகவும் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்தில் கவர்னர் வெளியேறியது மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு போன்றவற்றால் சட்டசபை வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

1 More update

Next Story