ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
Published on

பேட்டை;

நெல்லை பேட்டை 19-வது வார்டுக்கு உட்பட்ட ரகுமான் பேட்டையில் உள்ள தனியார் கட்டிடத்தில் ரேஷன் கடை வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மூலம் ரகுமான் பேட்டை, வீரபாகு நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கடை ஊழியர்கள், திடீரென அங்குள்ள பொருட்களை லோடு ஆட்டோவில் ஏற்றி குடியிருப்புக்கு அப்பால் உள்ள ஒரு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தனர்.

தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் கரையான் மற்றும் சுவற்றில் நீர் உமிழ்வதால் பொருட்களை சேமித்து வைப்பதில் சிக்கல் நிலவுவதால் அதை சரிசெய்து மீண்டும் அதே இடத்தில் இயங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கடை ஊழியர்கள் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com