சுடுகாட்டை இடமாற்ற கோரி பொதுமக்கள் சாலைமறியல்

பொன்னேரி அருகே சுடுகாட்டை இடமாற்ற கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சுடுகாட்டை இடமாற்ற கோரி பொதுமக்கள் சாலைமறியல்
Published on

பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சியில் காவல்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு சமுகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் சுடுகாடு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சுடுகாட்டை வேறு இடத்துக்கு மாற்ற அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஊராட்சி நிர்வாகம் வேறு இடத்துக்கு மாற்றுவதாக தெரிவித்தது. ஆனால் இதுநாள் வரை சுடுகாடு வேறு இடத்துக்கு மாற்றப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவரை சுடுகாட்டுக்கு கொண்டு வந்தனர். இதனை கண்டித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்னேரி போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com