வடகிழக்கு பருவமழையின்போது பேரிடர் குறித்து கட்டுப்பாட்டு மையத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம்

வடகிழக்கு பருவமழையின்போது பேரிடர் குறித்து கட்டுப்பாட்டு மையத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழையின்போது பேரிடர் குறித்து கட்டுப்பாட்டு மையத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம்
Published on

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 04329-228709 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com