புதிய பஸ் நிலையத்தில் சேதம் அடைந்த சாலை

நாகூர் புதிய பஸ் நிலையத்தில் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புதிய பஸ் நிலையத்தில் சேதம் அடைந்த சாலை
Published on

நாகூர் புதிய பஸ் நிலையத்தில் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதம் அடைந்த சாலை

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

நாகூரில் புதிய பஸ் நிலையத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பாக சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள் உள்ள பழமை வாய்ந்த கிணற்றின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

சாலை சேதம் அடைந்துள்ளதால் வெளியூரில் இருந்து நாகூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுக்கும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் புதிய பஸ் நிலையத்தில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com