போதைப் பொருட்களுக்கு இரையாகும் மக்கள்: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்


போதைப் பொருட்களுக்கு இரையாகும் மக்கள்: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 20 Jan 2026 10:29 AM IST (Updated: 20 Jan 2026 10:35 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா போதையில் இளைஞர் மீது அரிவாளால் தாக்கப்படும் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

சென்னை வேளச்சேரியில் நேற்று மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் நபரான பார்த்திபன் என்பவர் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி என்பது நெஞ்சை பதைக்க வைக்கிறது. இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே? தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன.

நான்கரை ஆண்டுகளாக நான் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது. இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய முதலமைச்சர்?

காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். பார்த்திபனை தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story