தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
Published on

சென்னை,

அரையாண்டு விடுமுறை, வாரவிடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால், விடுமுறை மற்றும் பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

சென்னை மற்றும் பெங்களூருவில் தங்கி பணிபுரிந்துவரும் மக்கள், வாகனங்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருவதால், முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

அதேபோல, கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான தமிழர்கள் வசித்துவரும் நிலையில், அவர்களும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துள்ளதால், அத்திப்பள்ளி சுங்கச்சாவடி, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி, தருமபுரி-தொப்பூர் சுங்கச்சாவடி, சேலம்-ஓமலூர் சுங்கச்சாவடி ஆகிய 4 சுங்கச்சாவடிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com