

திருப்பூர்
திருப்பூர் குமரன் சாலை மிகவும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும் . இந்த பகுதியிலேயே போலீஸ் நிலையமும் உள்ளது. இங்குள்ள பூங்கா ஒன்றின் முன்பு கிளி ஜோசியம் பார்த்து வருபவர் ரமேஷ் .
இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரமேசை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர் ஒரு துண்டு நோட்டீசை வெளியிட்டார். பெண்களை வசியம் செய்ததால் கொலை செய்ததாக அதில் குறிப்பிட்டு உள்ளார்.
பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.