ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சிவகங்கை,

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 10 ஆயிரத்து 839 ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.. இவற்றில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற 15-வது நிதிக்குழு மூலம் ரூ.4 ஆயிரத்து 679 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோய்களுக்குரிய மருந்து இருப்பு உள்ளது. இன்னும் 6 மாதத்தில் ஒரு கோடி பேருக்கு தேவையான அளவு மருந்து தயார் நிலையில் வைக்கப்படும். ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தற்போது குணமடைந்துள்ளார். வைரஸ்கள் பல்வேறு வடிவில் வரும் நிலையில் அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புற்று நோய் சிகிச்சைக்கென பிரத்தியேக சிகிச்சை மையங்களை மாவட்டந்தோறும் தொடங்க உள்ளோம் அதேபோல் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை பிரமாண்டமாக விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com