அல்வாவை போலவே நெல்லை மக்களும் இனிமையானவர்கள் - பிரதமர் மோடி பேச்சு

தமிழக மக்கள் பா.ஜ.க.மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
அல்வாவை போலவே நெல்லை மக்களும் இனிமையானவர்கள் - பிரதமர் மோடி பேச்சு
Published on

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் பா.ஜ.க.பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வாவைப் போன்ற, இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள்.

தமிழக மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்கள் வருங்காலம், எதிர்காலத்தை பற்றி மிகவும் தெளிவாக இருப்பார்கள். வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு கிடைக்கும் மதிப்பு அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறையில் வெளிநாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். உகஜ்வாலா திட்டத்தின் மூலம் 40 லட்சம் பெண்கள் சமையல் எரிவாயு பெற்றுள்ளனர். எனது திட்டங்களால் பயனடைந்த பெண்கள் எனக்கு ஆசி வழங்குகிறார்கள். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி வரை சென்று சேருகிறது என்றார்.

 பாளையங்கோட்டையில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன்,  அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com