நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி
Published on

சென்னை,

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் , இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், தனியார் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு 4 மணியளவில் கொண்டு வரப்பட்டது. எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் , அஞ்சலிக்காக இன்று இரவு முழுவதும் நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்படுகிறது. எஸ்.பி.பி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிக அளவு திரண்டுள்ளனர். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் எஸ்.பி.பி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com