தேர்தல் முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன
தேர்தல் முடிந்து சென்னை திரும்பிய மக்கள்:  ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. தேர்தல் விடுமுறை மற்றும் வார இறுதி நாள் விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து அவர்கள் சென்னை நோக்கி இன்று முதல் வரத் தொடங்கி உள்ளனர்.

நாளை ஒரே நேரத்தில் வாகனங்களில் வரும் போது கடும் நெரிசல் ஏற்படும் என்பதால் இன்று காலை முதலே ஏராளமானோர் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்னை நோக்கி வரத் தொடங்கினர். இதனால் இன்று மதியம் முதலே சென்னை நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடி, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. மாலை முதல் ஏராளமான வாகனங்கள் வந்ததால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். கிளாம்பாக்கத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கூடுதல் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை திரும்பும் வாகனங்களால் நாளை காலை வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com