பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் இன்று சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

சென்னை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து நாளை வேலை நாட்கள் தொடங்க உள்ளதையடுத்து, வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் இன்று சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

இதன் காரணமாக மதுராந்தகத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதன் தொடர்ச்சியாக பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com