பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்


பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
x

தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை,

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில், பெரும்பாலான மக்கள் நேற்று சென்னை திரும்பினர். இதற்காக ஏற்கனவே பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் ஒருபக்கம் என்றால் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாத ஏராளமான பயணிகளும் இவர்களுடன் சேர்ந்தனர். முன்பதிவு மட்டுமல்லாது, தட்கல் டிக்கெட் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் என வழக்கத்தைவிட ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி போன்ற முக்கியமான ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட கார் போன்ற தங்கள் சொந்த வாகனங்களில் பயணித்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் இரவு நேர பயணத்தை தவிர்த்து பகல் நேரமே திரும்பியதால், நேற்று காலை முதலே விக்கிரவாண்டி, செங்கல்பட்டு பரணுர் போன்ற சுங்கச்சாவடிகளில் வழக்கத்தை விட கூடுதலாக வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. உளுந்தூர் பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்கின்றன. அதேபோல, தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

1 More update

Next Story