சென்னை திரும்பும் மக்கள்: பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
சென்னை திரும்பும் மக்கள்: பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

சென்னை,

பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும், ஆயுதபூஜை விடுமுறையையொட்டியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதனால் சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி பொதுமக்கள் வந்ததால் ஜி.எஸ்.டி. சாலை, பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைகின்றன.

அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் ஒரே நேரத்தில் சென்னை நகருக்குள் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com