வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியல்.

பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.
வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியல்.
Published on

பல்லடம், 

பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகர் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகக் கூறி அந்தப் பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணா நகர் பகுதியில் சரக்கு வேன் மோதி ஒருவர் உயிரிழந்தார் இரண்டு பேர் காயம் அடைந்தனர். அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போலீசார் வேகத் தடுப்புகளை வைக்கப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று அதே இடத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முதியவருக்கும், அவருடைய பேத்திக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சம்பவ இடம் வந்த போலீசார் வேகத்தடை வைக்க நெடுஞ்சாலைத்துறை இடம் பேசி அனுமதி வாங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 20நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com