

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள சூழலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம் என்றும் பொதுமக்கள் தாமாக முன்வந்து சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.