மஞ்சப்பைகளை பயன்படுத்த மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்த பொதுமக்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மஞ்சப்பைகளை பயன்படுத்த மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியாக சென்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் மெய்யநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும். பசுமை பரப்பின் விகிதத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கெரேனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கல்வி நிலையங்களில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com