"டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பீதியடைய வேண்டாம்"- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பீதியடைய வேண்டாம் என மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
"டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பீதியடைய வேண்டாம்"- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

சென்னை,

கோயம்பேட்டில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

"சென்னையில் கடந்த 3 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகமாகியுள்ளது. இருப்பினும் மக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பீதி ஆக வேண்டாம். நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தி ஆகும். வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் தண்ணீர் சேகரித்து வைக்கும் டிரம், தொட்டி போன்றவற்றை மூடியே வைக்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் தாமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனையை அணுக வேண்டும். 3,317 பணியாளர்கள் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிக்கத் தொடர் பணி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மாதம் 80 பேருக்கு டெங்கு பாதித்த நிலையில், இம்மாதம் 31 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com