'எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்'

‘பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசை அகற்றி விட்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
'எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்'
Published on

கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கீரனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அ.தி.மு.க. பொருளாளரும், மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் குப்புசாமி, தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அப்பன் என்ற கருப்புசாமி (கிழக்கு), சண்முகராஜ் (மேற்கு), ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர்கள் என்.பி.நடராஜ் (கிழக்கு), பாலசுப்பிரமணியம் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

கடந்த 1 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் தலைமேல் பல்வேறு வரிகளை உயர்த்தி துயரத்தில் ஆழ்த்தியுள்ளனர். பால் விலையை ரூ.3 குறைத்துவிட்டு ரூ.12 உயர்த்தி உள்ளனர்.

சொத்து-வீட்டு வரி உயர்வு

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். ஆனால் இதுவரைக்கும் ரத்து செய்யவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது உயர்த்தப்படாத மின்கட்டணம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனேயே உயர்த்திவிட்டனர். மேலும் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தப் போகிறார்களாம். இதுமட்டுமின்றி சொத்து வரி, வீட்டு வரி ஆகியவற்றையும் உயர்த்தி உள்ளதால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்த தி.மு.க.வை அகற்றவும், வரக்கூடிய தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையவும் மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, மீனவரணி செயலாளர் மனோகரன் மற்றும் கீரனூர் பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆயக்குடி

இதேபோல் ஆயக்குடி பேரூர் அ.தி.மு.க. சார்பில், புதுஆயக்குடியில் செயலாளர் வக்கீல் சசிக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன் (கிழக்கு), முத்துசாமி (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, பழனி நகர செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டுவரி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது, பேரூர் துணை செயலாளர் நாசர், அவைத்தலைவர் அப்பாஸ்அலி, மாவட்ட பிரதிநிதி மோகன், பெரியகலையம்புத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வடமதுரை

வடமதுரை மூன்று சாலை சந்திப்பில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வடமதுரை நகர அ.தி.மு.க. செயலாளர் பி.டி.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன், தண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தென்னம்பட்டி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் பால் விலை, மின்கட்டண உயர்வுக்கு தி.மு.க. அரசை கண்டித்தும், வடமதுரை தென்னம்பட்டி பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், கூட்டுறவு சங்க தலைவர் மணி, நகர துணை செயலாளர் ஜானகிராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில் ஆண்டவர், யமுனா சக்திவேல், சரவணன், மாணவரணி செயலாளர் அ.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெய்க்காரப்பட்டி

நெய்க்காரப்பட்டியில், பேரூர் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நெய்க்காரப்பட்டி பேரூர் செயலாளர் விஜயசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டணம், பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

ஒன்றிய செயலாளர்கள் முத்துச்சாமி (மேற்கு), ஆர்.எம்.டி.சி. மாரியப்பன் (கிழக்கு), பெரிய கலையமுத்தூர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் கோபால் மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை

நிலக்கோட்டை பேரூர் அ.தி.மு.க. சார்பில், பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பேரூர் செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான யாகப்பன், முன்னாள் எம்.பி. உதயகுமார், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணக்குமார், நிலக்கோட்டை நகர பொருளாளர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள் சிமியோன் ராஜ், சேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேடசந்தூர்

வேடசந்தூரில், பேரூர் அ.தி.மு.க. சார்பில் மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வேடசந்தூர் நகர செயலாளர் பாபுசேட் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.யும், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை செயலாளர் ஜான்போஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்மையப்பன், ஒன்றிய ஜயலலிதா பேரவை செயலாளர் நிலாதண்டபாணி, ஒன்றிய துணை செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி தங்கராஜ், நகர மேலவை பிரதிநிதி நீலமேகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குஜிலியம்பாறை

பாளையம் பேரூர் அ.தி.மு.க. சார்பில், குஜிலியம்பாறையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பாளையம் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். குஜிலியம்பாறை அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட கவுன்சிலர் மீனாட்சி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயருமான மருதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் குஜிலியம்பாறை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய பொருளாளர் குமரேசன், குஜிலியம்பாறை ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜேஷ், குஜிலியம்பாறை ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் முனியாண்டி, பாளையம் பேரூர் இளைஞரணி செயலாளர் ரவி, மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சின்னாளப்பட்டி

ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சின்னாளப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசின் சொத்து வரி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சந்தானகிருஷ்ணன், நகர செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய கவுன்சிலர்கள் வெண்ணிலா அருள், தேன்மொழி பாலாஜி, நகர துணை செயலாளர் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com