உணவு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதி

உணவு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
உணவு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதி
Published on

சிவகாசி, 

சிவகாசி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி இந்திரா நகர் சமுதாய கூடம் அருகே நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 300-க் கும் மேற்பட்டோர் அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை, உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் தான் நாட்டை ஆள வேண்டும். அ.தி.மு.க ஆட்சி காலங்களில் மக்களை பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஆளும் இயக்கமாக இருக்க வேண்டிய நாம் சூழ்நிலை காரணமாக ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், சிவகாசி மாநகராட்சி பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com