முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

சோளிங்கரில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்
Published on

மகாளய அமாவாசையை முன்னிட்டு சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்தமான தக்கான்குளக் கரையில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலை முதலே குவிந்தனர்.

அவர்கள் தக்கான்குளத்தில் நீராடி தங்கள் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து, மோட்சம்பெற வேண்டி தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோளிங்கர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com